அன்பு நேயர்களே,
நான் சிறு வயது முதல் இயற்கையாகவே
கோவில் சிற்பங்களை வரைவதில் மிகவும் ஆர்வம் உடையவனாக இருந்தேன். பிறருடைய
கற்பித்தல் ஏதும் இன்றி இதனை நான் சிரத்தையுடன் செய்து வந்தேன். எனது வாலிப வயதில்
எனது மனதில் ஏழுமலையான் வெங்கடாசலபதியின் சிலையை கோயிலில் உள்ளபடியே வரையவேண்டும்
என்ற ஆசை தோன்றிற்று. இதன் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட தடவை ஏழுமலையானை
தரிசித்து அத்திருவுருவ சிலையின் அமைப்பை என் மனதில் பதிவு செய்ய ஆரம்பித்தேன்.
காலங்கள் செல்ல செல்ல ஏழுமலையானின் திருவுருவ சிலையை எந்தவித குறையும் இன்றி
ஆபரணங்பளுடனும், அந்த ஆபரணங்களின் வர்ணங்களுடனும் வரைவதற்கு அந்த ஏழுமலையான்
எனக்கு திருவருள் புரிந்தார். ஒருமுறை அவ்வாறு வரைந்த ஒரு படத்தை நமது காஞ்சி
பெரியவரிடம் கொடுக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவ்வாறு நான் அவரிடம்
அப்படத்தை தரும்போது அவர் மிகவும் மகிழ்ந்து உனக்கு என்ன வேண்டும் என வினவினார்.
அவரிடம் நான், என்னிடம் எவரெல்லாம் இப்படத்தை வரைந்து பெற்றுக்கொள்கிறார்களோ
அவர்களுக்கெள்ளாம் அந்த ஏழுமலையானின் பூரண அருள் கிடைத்திட வேண்டும் என
வேண்டிக்கொண்டேன். அதற்கு அவர் தனது பூரண ஆசிகளை அளித்து ஆசிர்வதித்தார். அன்று
முதற்கொண்டு இவ்வாறு ஏழுமலையானின் படத்தை வரைந்து பிறருக்கு கொடுப்பதை எனது
சேவையாக செய்து வருகிறேன். இப்படத்தை உருவாக்குவதற்குண்டாகும் பொருட்களுக்கு ஆகும்
செலவின் தொகையையும், எனது எளிய ஜீவனத்திற்குண்டாகும் செலவின் தொகையையும் மட்டுமே
பெற்று வருகிறேன். நான் வரைந்துள்ள சில படங்களின் போட்டோ பிரதிகளை கீழ்வருமாறு
அளித்துள்ளேன்.
(English Version : I
have a natural interest in drawing the pictures of temples and indulgence in
divine arts from my very early childhood.I have been cultivating this art on my
own without any formal tutorship or guidance.In my teens I had an urge to
sketch the portrait of Lord Venkateswara of Thirupathi.During my frequent
visits in my younger days to the abode of the Lord,I tried to retain the
original image of the Lord in my retina to reproduce Him in my drawings.By the
grace of Lord Balaji ,it took me years to bring Him out in all splendor and
glory in my art.Initially I did the drawings in small visiting cards.Later,I
made water colour sketches in a bigger boards.Nowadays,I am doing oil paintings
in canvass of larger sizes.
On
a memorable occasion,I had the darshan of Maha Periyava at Kanchipuram in the
year 1987.I had with me a small card sized drawing of Lord Balaji which I
submitted to Him and sought His blessings.The great Sage had a keen look at the
card.To my everlasting stupor,the great Sage had requested my permission to
keep the card to Himself.Stunned beyond belief,I stood motionless but in His
ever kind words He asked what I sought from Him.I reverentially submitted that
those who get my Lord Venkateswara portrait should be blessed with prosperity
and have a peaceful life.Maha Periyava raised His hands upwards and bestowed
His blessings to my request. Since
then I have been doing this divine art with a service -oriented motive.I am not
driven by commercial interest.I am doing this oil paintings in canvass to
various sizes--2'x1',3'x2',4'x3',8'x5'.I have to my credit two portrait of
8'x5' and one of this is adorning Kanchi mutt.The great Silpi of vikatan fame
is my inspiration.
I collect a reasonable amount towards
the cost of canvass board,oil paint and my labour.I am posting the copies of my
paintings and sketches for your glimpse.)
இதற்கு
அடுத்ததாக வரும் இப்படம் எனது நண்பர் ஒருவர் தனது கடையின் வரவேற்பு அறையில்
வைப்பதற்கு ஏழுமலையானின் உருவத்தின் உண்மையான உயரத்திலேயே வரைந்து தரும்படி
கேட்டுக்கொண்டார். அங்ஙனம், வரைந்த இப்படத்தை காணவும்.
(This giant portrait of size 8'X5' is specially made on a specific order from a businessman)
எனது இதர படைப்புகளின் சில படங்களை உங்கள் பார்வைக்கு சமர்பிக்கிறேன்.
எனது சுய விவரம் :
பெயர் : ஆர். சுதர்சனம்.
பிறந்த தேதி : 11.08.1947
பிறந்த ஊர் : மதுரை
ஊத்தியோகம் : தொழில் வணிகத் துறை, தமிழ் நாடு
அரசு-ல் இருந்து ஓய்வு பெற்றுள்ளேன்.
எனது மின்னஞ்சல் : sudarsanam1947@gmail.com
எனது செல்போன் எண் : 9790663308
எனது முகவரி : புதிய
எண். 15, பழைய எண். 41பி,
புவனேஸ்வர் நகர், 3வது தெரு,
(அபிராமி
கல்யாண மண்டபம் எதிரில்)
குரோம்பேட்டை, சென்னை-600 044.
(My
personal details
Name
R.SUDARSANAM
Date of birth 11-8-1947
Native place Madurai
Profession Retied from State Government service
E mail sudarsanam1947@gmail.com
Cell number 9790663308
Address
New no 15,old no 41B,
Bhuvaneswari nagar,3rd street,
(opp.abirami kalyan mandapam),
Chromepet,Chennai 600044)
எனது புகைப்படம் :
(My
Photo ) :













